சைவ உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதைவிட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்கின்றனர்.காரணம் அசைவ உணவுகள் அதிக ருசியாக இருப்பது தான்.இந்த உணவுகளில் அதிக புரதச்சத்து நிறைந்திருக்கிறது.இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
புரதக் குறைபாடு இருப்பவர்கள் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.அசைவங்களில் கோழி,ஆடு,மீன் ஆகியவை பெரும்பாலானோர் விரும்பி உண்ணக் கூடியவையாக உள்ளது.இதில் கிரேவி,வறுவல்,குழம்பு,ப்ரை மற்றும் பிரியாணி என்று பல ருசியான உணவுகள் செய்து உண்ணப்படுகிறது.
முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ உணவுகல் சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.ஆனால் இன்று அப்படி அல்ல.நேரம் காலம் பார்க்காமல் அனைத்து தினங்களிலும் அசைவத்தை ருசி பார்க்கும் கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.
ஆனால் சில நாட்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.அதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த நாட்களில் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனை,வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்ற காரணத்தினால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பூஜை செய்யும் நாட்கள் மற்றும் கோயிலுக்கு செல்லும் நாட்களில் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கடினமான உழைப்பவர்கள் சற்று அதிகமான அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.சோம்பேறி வாழ்க்கைமுறை மற்றும் ஓர் இடத்தில் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்கள் குறைவான அளவில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.