கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

Photo of author

By Vinoth

கோவையில் அதிர்ச்சி..!! சீனியர் மாணவரை அரை நிர்வாணப்படுத்தி பெல்டால் தாக்கிய ஜூனியர் மாணவர்கள்..!! வலியால் கதறி துடித்த பரிதாபம்..!!

Vinoth

கோவை தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுரைக்கரையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்து, சீனியர் மாணவர் ஒருவர் பணத்தை திருடியதாக சொல்லப்படுகிறது.

இதனை, ஜூனியர் மாணவர்கள் நேரில் பார்த்துள்ளனர். இதையடுத்து, பணத்தை திருடியதாக கூறப்படும் மாணவனை அறைக்குள் பூட்டி வைத்து முட்டி போட வைத்து பெல்டால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அந்த மாணவர் வலியால் துடித்தபோதும், கையை மேல் தூக்க சொல்லி அந்த மாணவனை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய 13 மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களிடம், தங்களது பெற்றோர்களை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.