அதிர்ச்சி! திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

Photo of author

By Sakthi

ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷியாவுக்கும் வாத்தியார் விளையை சார்ந்த செல்வ மூர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கணவன், மனைவி, இருவருக்குமிடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தன் குறையை சொல்லி வந்திருக்கிறார். பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

கட்டிட மேஸ்திரியாக இருந்த செல்வமூர்த்தி வேலைக்கு சென்ற போது வீட்டில் தனுசியா மட்டும் தனியாக இருந்திருக்கிறார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சமயத்தில் தனுசியா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார் செல்வமூர்த்தி.

தனுசியாவின் நிலையை கண்டு கதறி அழுத செல்வமூர்த்தி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு அதேபோல தனுசியாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தனுசியாவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

தனுசியாவின் தற்கொலை தொடர்பாக அவருடைய பெற்றோர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் வாங்கியதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். புதிதாக திருமணமான பெண் ஒரே மாதத்தில் மரணமடைந்திருப்பதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.