தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்!

0
81

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்!

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

உத்தரபிரதேசத்தில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று அந்த மாநிலத்தில் நான்காவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 27-ந் தேதி ஐந்தாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 3-ல் ஆறாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 7-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 100 சதவீத வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,  லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களித்தால் அந்த மாணவர்களுக்கு, 10 வெகுமதி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து, லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியின் முதல்வர் கூறுகையில்,

நாளை (இன்று) நடைபெறும் நான்காவது கட்ட வாக்குப்பதிவு மற்றும் அதன்பின் நடைபெறும் தேர்தலில்  இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால் அந்த மாணவர்களுக்கு வெகுமதியாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K