Phone Pay G pay: நாட்டில் உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலத்தில் தற்போது அதன் பயன்பாட்டைப் அறிந்து ஒவ்வொரு நிறுவனமும் அதற்கு ஏற்ற கட்டணத்தை வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ரீசார்ஜ் செய்யும் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல இனி வரும் காலகட்டங்களில் நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கும் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் யுபிஐ உபயோகிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அப்படி போன் பே, ஜி பே பயன்படுத்துபவர்கள் இனி தொகை அனுப்ப வேண்டுமென்றால் அவர்கள் அக்கவுண்டிலிருந்து 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இது புது வகையான ரூல்ஸ் என்றும் இது சார்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நாம் ட்ரெயின் டிக்கெட், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல தேவைகளை செய்து வருகிறோம். அப்படி பயன்படுத்தப்படும் ஒவ்வொரு காரணிக்கும் இந்த தொகை வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய விதிமுறை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பதை தெரிவிக்கவில்லை. மேற்கொண்டு வசூல் செய்யப்படும் தொகை மற்றும் அதி ரீதியான தகவல்களை மட்டும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படி அனைத்து சேவைகளையும் இருந்த இடத்திலிருந்து பயன்படுத்துக் கொள்வதால் இந்த நடைமுறையை கொண்டு வந்திருக்கலாம் என பயனர்கள் கூறி வருகின்றனர். தற்போது கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறியதால் நாளடைவில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது குறைய அதிக வாய்ப்புள்ளது.