மக்களுக்கு ஷாக் நியூஸ்?இனி இவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க கூடாது! ஏன்?..
சுதந்திர தின 75-வது அமுதபெருவிழாவையொட்டி அனைத்து வீடுகள் தோறும் தேசியகொடியை பறக்க விட வேண்டும்.என பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இதற்கிடையே அரியானா மாநிலத்திலுள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தர மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வந்தது.
இதற்கு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் தேசிய கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அதில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் இதனை பெரியதாக எடுத்து கொண்டு கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என மாநில அரசு கேட்டுக்கொண்டது.இந்த தகவல் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.