ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

Photo of author

By Parthipan K

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்து தான் காரணமாக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்ய விரும்பாமல் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமான நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது மேலும் தற்போது டிக்கெட் முன்பதிவு போன்ற நடைமுறைகள் பயணிகள் அணுகும் விதமாக மிக எளிதாகி வரும் நிலையில் நாட்டில் சுமார் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது  விமான நிலையங்களைப் போலவே ரயில் நிலையங்களிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படவுள்ளது. ரயில்கள் குறித்து அனைத்து விவரத்தையும் திரையிடுவதற்கு  திட்டமிட்டப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே ஒலிபெருக்கி மூலம் ரயில்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் மற்றும் பிளாட்பார்ம் எண் உள்ளிட்ட அனைத்தும் அறிவிக்கப்படும்.

ஆனால் தற்போது இந்த முறை மாற்றம் செய்யப்பட்டு ரயில் நிலையங்களில் பயணிகள் அறியும் படி விவரங்களை டிஜிட்டல் திரையில் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் சென்னை டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதில் பயணிகளின் வசதிக்காக தமிழ்,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை அனைத்தும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.