தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா?

0
81
Shock news of Thalapathy 67! Is the director responsible for this?
Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67 படமானது தயாராக உள்ளது. கதாநாயக சமந்தா கமிட் ஆகி உள்ளார் என்றும் சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விஜயின் 67 படத்திற்கும் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயின் 67 படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோலிவுட் திரையுலகமே அடுத்து பெரியளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் தளபதி 67, இந்த படத்திற்கான ஷூட்டிங் கூட தொடங்கபடாத நிலையில் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பதே இயக்குநர் லோகேஷ் தான் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு அவர் யுனிவர்ஸ் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 திரைப்படம் இந்த LCU யுனிவர்ஸில் இணையுமா என்று தான் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் இது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் போது இயக்குநர் லோகேஷ் தானே அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் வெற்றி காரணமாக இயக்குநர் லோகேஷ் அவரின் தளபதி 67 திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளராம்.

இதன் காரணமாக அப்படத்தின் திரைகதையில் மேலும் சில நாட்கள் செலவிட இருப்பதாகவும், இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டநிலையில் தற்போது தளபதி 67 டிசம்பர் மாதத்திற்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K