மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்! 

Photo of author

By Amutha

மகளின் பையில் காத்திருந்த அதிர்ச்சி! கோபத்தில் பெற்றோர் செய்த கொடூர செயல்! 

மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கிட் இருந்ததால் பெற்றோர் செய்த கொடூர காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கவுசம்பி அருகிலுள்ள அலம்பாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் தன்னுடைய 21 வயது மகளைக் காணவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் அது குறித்து விசாரித்து தேடுதல் வேட்டை தொடங்கிய போது  கிராமத்துக்கு வெளியில் அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

அது பற்றி தீவிர விசாரணை நடத்திய பொழுது அது காணாமல் போன நரேஷ், சோபா தம்பதியினர்  மகள் என தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் அழைத்து விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின்னாக முரண்பாடான பதிலை கூறினர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தீவிர விசாரணையில் தங்கள் மகளை தாங்கள்தான் கொலை செய்தோம் என அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி பிரிஜேஷ் குமார் கூறும் போது, நரேஷ்,  தனது மனைவி ஷோபாவுடன் சேர்ந்து தங்களின் மகளைக் கழுத்தை நெரித்து கொலைசெய்ததாகத் தெரிவித்திருக்கின்றனர். அடையாளத்தை மறைப்பதற்காக உடல் மீது ஆசிட் ஊற்றி கால்வாயில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இதற்கு நரேஷின்  சகோதரர்கள் 2 பேர் உதவியுள்ளார்கள்.

நரேஷ் அளித்த வாக்குமூலத்தில் தனது பெண் பல வாலிபர்களுடன் போனில் பேசிக் கொண்டிருந்ததுடன் அவரது பையில் கர்ப்பத்தை கண்டறிய உதவும் சாதனம் இருந்தது. அதனால் ஆத்திரப்பட்டு தனது மகளுக்கு பல்வேறு வாலிபர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, கோபத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.