இந்திய உணவக கூட்டமைப்புகள், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஷொமைடோ போன்ற நிறுவனங்கள் உணவக விற்பனை தகவல்களை வெளியேற்றுகின்றன என கண்டறிந்துள்ளது. சமீபத்தில், ஷொமைடோ நிறுவனத்தின் பிளிங்கிட் நிறுவனம் வாயிலாக பிஸ்ட்ரோ என்ற வணிகத்தையும், ஸ்விக்கி, ஸ்நாக் என்ற வணிகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு பகுதியில் அதிகமாக மூவாகும் ஸ்நாக்ஸ்களை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக செய்து டெலிவரையும் செய்கின்றன. இது தொடர்ந்து வந்தால் பல உணவகங்களும் பாதிக்கப்படும். மேலும், தனது டெலிவரி ஆப்ஸ்களின் மூலம் அதிகம் தேவைப்படும் உணவுகளை முன்கூடியே தயாரித்து வைத்து அதனை விளம்பரம் செய்து விற்றுவிடும்.
இதனால் நடுத்தர மக்களுக்கு பெரும் வர்த்தக சரிவு ஏற்படும். இதனால் ஒட்டுமொத்த உணவு தொழிலுமே பாதிக்கப்படும். எனவே, இதனை அனுமதி செய்யக்கூடாது எனக் கூறியுள்ளது. இந்நிலை குறித்து, மத்திய வர்த்தகத் துறை செயலர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்திக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் இந்திய போட்டி ஆணையத்தையும் அணுகவும் உள்ளதாக இந்திய உணவக கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதனை தடுக்க மின்னணு வர்த்தக விதிகளை உடனடியாக அமல்படுத்த கோரியுள்ளது. இச்செய்தியை தொடர்ந்து, பிஸ்ட்ரோ ஒரு தனிப்பட்ட நிறுவனம். அதில் எந்தவொரு வாடிக்கையாளர்களின் தகவல்களும் பயன்படுத்தப்படவில்லை என பிளிங்கிட் விளக்கம் அளித்துள்ளது.