பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இன்றைய கால கட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் பழங்குடியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல போதிய வசதி இல்லாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அவர்களின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை பள்ளியில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ மற்றும் மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்.மேற்படி EMIS இணையதளம் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்மென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கல்வி இல்ல நாடக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.