பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

Photo of author

By Parthipan K

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில்   வேலை செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார்.

மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தான் வசிக்கும் பகுதிக்கு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமி அலற சத்தத்தை கேட்டு சிறுமியின்  உறவினர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்க்கும் பொழுது சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார் மேலும் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு. அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இருந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் சிறுமியிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சிறுமியை முதியோர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அந்த நிலையில் புதிய எருமை வெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்கிற சின்னதுரை, பாஸ்கர் ,சதீஷ், ரமேஷ் மற்றும் விஜயகுமார் ஆகிய ஐந்து பேரும் வீடியோவை மறைவாக நின்று எடுத்து சம சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதிர்யவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலு மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களை பகிர்ந்த ஐந்து பேர்கள் உள்ளிட்ட ஆறு பேர்கள் மீதும் போக்சோ உள்ளிட்டு ஆறு பின்பிரிவின்  கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.