மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இந்தியாவில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பிற்கு சீனா தான் காரணம்!!
கடந்த வருடம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என பரபரப்பான தகவல்கள் வெளிவந்ததையடுத்து அந்த ஹேக்கர்கள் திருடிய தரவுகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததையடுத்து எய்ம்ஸ் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து சேவைகளையும் முழுமையாக முடக்கம் செய்தது.
இவ்வாறு ஹேக் செய்தது குறித்து பல குழுக்கள் தீவிரமாக விசாரணை செய்து வந்ததையடுத்து சில நாட்கள் கழித்து ஹேக்கர்களிடமிருந்து குறிப்பிட்ட சில தரவுகள் மீட்டதாக தகவல்கள் வெளியிட்டனர்.
அவ்வாறு எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையத்தை ஹேக் செய்ததால் அந்த தரவுகள் அனைத்தும் வைரசால் பாதிப்படைந்துள்ளதாகவும் அதில் இருந்து மீட்டெடுக்க ஸ்கேன் செய்யப்படுவதாகவும் கூறினர்.
அதுமட்டுமின்றி இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சர்வர்கள் தற்பொழுது பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
இந்த விசாரணையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தரவுகள் அனைத்தையும் சீனா ஹேக் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சீனா ஹேக் செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
எய்ம்சில் கிட்டத்தட்ட 100 சர்வர்கள் இயங்கி வந்த நிலையில் ஹாக்கர்களிடமிருந்து தற்போது 5 சர்வர்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.தற்பொழுது ஏற்படுத்தி உள்ள நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.