HDFC வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதத்தை உயர்த்தியது..முழு விவரம் இதோ !

0
139

மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இந்த புதிய வட்டி விகிதம் இன்று (டிசம்பர்-14) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ.2 கோடிக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி விகிதம் 7 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 3.50 சதவீதம் மற்றும் அதிகபட்ச வட்டி விகிதம் 7.75 சதவீதம் திருத்தப்பட்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2 கோடிக்கும் குறைவான டெர்ம் டெபாசிட்டுகளுக்கான புதிய வட்டி விகிதம் 7-14 நாட்களுக்கு 3 சதவீதமாகவும், 15-29 நாட்களுக்கு 3 சதவீதமாகவும், 30-45 நாட்களுக்கு 3.50 சதவீதமாகவும் உள்ளது. 46 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு வட்டி விகிதம் 4.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. 6 மாதங்கள், 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் 15 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு குறைந்தபட்சம் 3.50 சதவீத வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு வட்டி விகிதம் 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி இப்போது ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கு குறைந்தபட்சம் 3% மற்றும் அதிகபட்சம் 6.75% வட்டி வழங்குகிறது.

author avatar
Savitha