அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சபரிமலை கோவிலில் இனி காவலர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படும்!
கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது.
இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.அதன் பிறகு இந்த மண்டல பூஜையானது டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று நிறைவடைந்து நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து மீண்டும் வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்ச்சக்கணக்கான பக்கதர்கள் அந்த பூஜைகளில் பங்குபெறுவார்கள்.அதனால் அங்கு 3ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.மேலும் போலீசார் அங்கேயே 15நாட்கள் தங்கி பணியாற்றுவார்கள்.
அவர்களுக்கு தேவசம்போர்டு சார்பில் இலவசமகா உணவு வழங்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேவசம் போர்டுக்கு வருவாய் குறைந்துள்ளது.அதனால் அந்த செலவினை அரசே ஏற்று வந்தது.
இந்நிலையில் நடப்பாண்டு முதல் காவலர்களுக்கு இலவச உணவு இல்லை எனவும் அவர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100ரூபாய் வசூல் செய்யவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை அமைப்புகள் முதல் மந்திரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.