அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! 

Photo of author

By Amutha

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! 

Amutha

Shocking murders!! The brutality of tying a love couple to a stone and throwing them into the river!!

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! 

காதலித்த கொடுமைக்காக இளம் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லை கட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தின் ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி வயது 18. அதேபோல் அருகில் உள்ள கிராமமான பாலுபுராவை சேர்ந்தவர் ராதேஷ்யாம் வயது 21. சிவானியும், ராதேஷ்யாமும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிந்த பொழுது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற போதும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த 3-ஆம் தேதி முதல் காதல் ஜோடியை காணவில்லை. இதுகுறித்து ராதேஷியாமின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் காதல் ஜோடி வேறு ஊருக்கு ஓடிச் சென்று இருக்கலாம் என்று கூறினர். ஆனால் ராதேஷ்யாமின் குடும்பத்தினர் போலீசாரை தொடர்ந்து வற்புறுத்தி ஷிவானியின் குடும்பத்தினர்கள் அவர்களை கொலை செய்து இருக்கலாம் என்று கூறியதால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக இளம் பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் துருவித் துருவி தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன.

கடந்த 3-ஆம் தேதி அன்று காதல் ஜோடியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாக ஷிவானியின் தந்தை ராஜ்பால்சிங் தோமர் கூறியுள்ளார் . பின்னர்  அன்று இரவே காதல் ஜோடியில் உடல்களுடன் கனமான கற்களை கட்டி முதலைகள் அதிகம் உள்ள சம்பால் ஆற்றில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆற்றில் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினரையும் நீச்சல் வீரர்களையும்  ஈடுபடுத்தினர்.

ஆனால் கொலை நடந்த 15 நாட்களுக்கு மேல் ஆனதால் காதல் ஜோடியின் உடல்கள் மீன்கள் மற்றும் முதலைகளுக்கு இரையாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.  மேலும் இருவரின் உடல்களும் கிடைத்தால்தான் ஒரு இறுதியான முடிவுக்கு வர முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே சாதியை சேர்ந்த போதிலும் காதலித்த ஒரு செயலுக்காக பெற்ற பெண்ணையே தந்தை ஆணவ கொலை செய்தது மத்திய பிரதேச  மாநிலத்தை அதிர வைத்துள்ளது.