அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி!! ரத்து செய்யப்படும் குடியுரிமை!!

Photo of author

By Gayathri

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க தேர்தலை குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், கமலா ஹாரிசை தோற்கடித்த டிரம்ப் அவர்கள் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராகியுள்ளார்.

டிரம்ப் அவர்கள் அமெரிக்காவின் அதிபராக மாறியது அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இந்தியர்களை பொறுத்தவரையில் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகவே அமைந்துள்ளது. ஏனெனில் ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்திருந்தார்.

அதில் முக்கியமான வாக்குறுதி இந்தியர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற செய்வேன் என்பதாகும். இவ்வாறு அவர் செய்ய முற்பட்டால், அமெரிக்காவில் வாழும் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்களின் எதிர்கால நிலை என்னவாகும் என்பது கவலைக்கிடமாக உள்ளது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், நான் பதவியேற்ற முதல் நாளில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் செயல்முறையைத் தொடங்கும் சட்டத்தை கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அமெரிக்க அரசியலமைப்பின் படி, நாட்டில் பிறந்த எவரும் பிறப்புரிமை மூலம் தானாகவே அமெரிக்க குடியுரிமையைப் பெறுகிறார்கள். இருப்பினும், பிறப்புரிமை மூலம் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கு இந்த விதியை திருத்த ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார்.

இந்த உத்தரவின் படி நிகழப்போகும் மாற்றங்கள் பின்வருமாறு :-

✓ அமெரிக்காவில் பிறக்கும் புலம்பெயர்ந்த குழந்தைகள் இனி பிறப்பால் அமெரிக்க குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.

✓ பிறப்புரிமைக் குடியுரிமைக்கு தகுதி பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும்.

✓ கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இந்தியர்கள் கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கிறார்கள். கிரீன் கார்டு அந்தஸ்தைப் பெற இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அரசாங்க மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

எளிமையான கணக்கீடுகளின்படி, அவர்களில் சுமார் அரை மில்லியன் பேர் அந்த காலக்கெடுவை அடைவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள். இதன் விளைவாக, இந்த புதிய சட்டத்தின் காரணமாக, சுமார் 250,000 புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் என்பது இந்தியர்களின் மனதில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.