ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்! டிசம்பர் 1 முதல் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் வராது! டிஆர்ஏஐ-இன் புதிய ரூல்!

Photo of author

By Gayathri

சமீப காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது பலரின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இதில் டெக்னாலஜி அதிகரித்துக் கொண்டு வந்தாலும் அதற்கு ஏற்றவாறு பல மோசடிகள் நடந்து வருகின்றன. இதனால் பல மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பண மோசடி உள்ளிட்ட பல ஆபத்துகள் இருந்து வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார்கள் குவிந்து வருகின்றன.

தற்போது ஸ்பேம் எஸ்எம்எஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபிஷிங் அச்சுறுத்தல்களைத் தடுக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பிஎஸ்என்எல் ஆகிய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் “டிஆர்ஏஐ” டிசம்பர் 1 முதல் டிரேசெபிலிட்டி விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“டிஆர்ஏஐ-இன் டிரேசெபிலிட்டி” விதியின்படி, “ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் மெசேஜ் சேவையைத் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த அனுப்புனரின் அனைத்து மெசேஜ்களையும் கண்காணிப்பது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள், டெலிவரி அப்டேட்கள் போன்ற மெசேஜ்கள் மற்றும் ஓடிபிகளை அனுப்புவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. காரணம், பல நிறுவனங்கள் அவர்களின் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபிகளை அனுப்புகின்றன. அனுப்பப்படும் தகவல்களில் திரும்பி அழைக்கக்கூடிய எண் வங்கியால் அங்கீகரிக்கப்படாத என்னாக இருந்தால் அந்த எஸ்எம்எஸ் தடை செய்யப்படும். அது மட்டும் இல்லாமல், வாடிக்கையாளரின் மொபைல் போனுக்கு மெசேஜ் டெலிவரி ஆகாது. இந்தப் புதிய விதியால் ஓடிபி மெசேஜ் வருவதற்கு தாமதமாக வாய்ப்பு உள்ளது.

முன்பு டெலிகாம் ஒழுங்கு முறை நிறுவனமானது அக்டோபர் 1, 2024 வரை இந்த விதிகளை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தது. பின்பு நவம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 1 ஆம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஆர்ஏஐ-இன் இந்த புதிய விதிகளுக்குத் தளர்வளிக்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய விதியை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து டிஆர்ஏஐ தற்போதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. இது அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.