ஆண்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி!! எதிர்காலத்தில் ஆண் இனமே இல்லாமல் போக வாய்ப்பு!!

Photo of author

By Vijay

MALE: y குரோமோசோம் குறைந்து வரும் காரணத்தால் எதிர் காலத்தில் ஆண்கள் இனமே அழிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஒரு ஆணின் பாலினத்தை தீர்மானிக்கும் y குரோமோசோம் படிப்படியாக அழிந்து வருவதாக தகவல் வெளியாகும் நிலையில் தற்போது ஜீன் எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளது. இப்படியே குறைந்து சென்றால் எதிர் காலத்தில் ஆண் என்ற இனமே இருக்காது என்று தகவல் வெளியாகி வருகிறது.

பொதுவாக மனிதர்களில் அவர்களின் பாலினத்தை தீர்மானிப்பது குரோமோசோம் தான். அதில் மனிதர்களில் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்களும், ஆண்களுக்கு X மற்றும் சிறிய Y குரோமோசோம்களும் இருக்கும். இந்த y குரோமோசோம்தான் ஆண் என பாலினத்தை தீர்மானிக்கும்.

இதில் முக்கியமாக SRY என்ற ஜீன் உள்ளது, இதுதான் ஆண் பாலின பண்புகளை உருவாக்கும் செயலினை தூண்டும். இது கரு உருவாகிய 12 வாரத்திற்கு பின் இந்த SRY ஜீன் அதன் வேலையை துவங்கும். இதனால் தான் ஆண் பாலினத்தின் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் சுரக்கிறது.

இதற்கு முன் சுமார் 166 ஆண்டுகளுக்கு முன்னதாக Y குரோமோசோமில் 900 ஜீன்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆண்களின் Y குரோமோசோமில் 55 ஜீன்கள் தான் உள்ளது. ஒரு மில்லியன் வருடங்களில் 5 ஜீன் குறைந்து கொண்டே வருகிறது.

 இப்படியே குறைந்து கொண்டே போகுமானால் இன்னும் 11 மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் முற்றிலும் மறைந்து போக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் Y குரோமோசோமின் அழிவு மூலம் பல மனித இனங்கள் தோன்றவும் வழிவகுக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.