பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

0
96

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது.

இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை தக்காளியின் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வரை கிலோ ரூ.85 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று மேலும் ரூ.15 உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. நவீன் தக்காளி விலை 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக சில்லறை விலையில் தக்காளி கிலோ 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி மட்டுமல்ல இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, மற்றும் காய்கறிகளின் விலையும் கணிசமான அளவில் விலை உயர்ந்தே காணப்பட்டது. இஞ்சி- 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம்- 150 ரூபாய்க்கும், பட்டாணி- 200 ரூபாய்க்கும், பூண்டு- 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  550 டன் தக்காளி மட்டுமே இன்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Previous articleமூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா… இதற்கான சில வழிமுறைகள் இதோ… 
Next articleஉடலுறவு செய்து முடித்த பின் ஏன் சோர்வு ஏற்படுகிறது… அதற்கான காரணங்கள் இதுதான்…!