காபி டீயில் பிரட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!!

0
74

பெரும்பாலானோர் காலைப்பொழுது டீ மற்றும் காபியில் தான் தொடங்குகிறது.இந்த சூடான பானங்களுக்கு ஏற்ற பெஸ்ட் சைடிஸ் பிஸ்கட் மற்றும் பிரட்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாக உள்ளனர்.

சிலர் பிரட் இல்லாமல் டீ,காபி குடிக்க மாட்டார்கள்.மைதா முட்டை கொண்டு தயாரிக்கப்படும் பிரட் சிலருக்கு காலை உணவாகவே உள்ளது.பிரட்டில் ஜாம்,வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை தடவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

சிலர் பிரட் ஆம்லெட்,பிரட் அல்வா,பட்டர் பிரட் போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர்.ஒரு பிரட் சாப்பிட்டலே பசி ஆறிவிடும் என்பதால் உணவு சமைக்காத நேரத்தில் இதை உட்கொள்கின்றனர்.தற்பொழுது பிரட்டை வைத்து ஏராளமான புதிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் பிரட் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவுப் இல்லை.சொல்லப்போனால் இதில் ஊட்டச்சத்து என்ற ஒன்று மிக மிக குறைவாக உள்ளது.கோதுமை வைத்து தயாரிக்கப்படும் பிரட்டில் நார்ச்சத்து,தாதுப்பொருட்கள்,வைட்டமின்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளதால் இதை அனைவரும் உட்கொள்ளலாம்.

ஆனால் மைதாவில் தயாரிக்கப்பட்ட வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து மிக குறைவாகவே உள்ளது.சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால் வெள்ளை பிரட் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை,இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

மைதா பிரட் சாப்பிடக் கூடாதவர்கள்:

*உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் மைதா பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வெள்ளை பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மைதா பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Previous articleசொந்த வீடு மற்றும் வாடகை வீட்டிற்கு குடியேறும் பொழுது பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா?
Next articleகார்த்திகை தீபம்: எண்ணெய் வேண்டாம் தண்ணீர் இருந்தால் விளக்கு நின்று எரியும்!!