மது பிரியர்களுக்கு தமிழக அரசின் அதிர்ச்சியூட்டும் செய்தி! 500 கடைகள் மூடலா??
தமிழகத்தில் எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ மது என்ற வார்த்தையினால் ஒவ்வொரு நாலும் குடும்ப தலைவிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பிரச்சினைகள் வந்து சேராத நாட்களே இல்லை என்று கூறிவிடலாம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மகளிரிடம் உள்ள வாக்கினை பெற வேண்டும் என்றால் மது ஒழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளன.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த போவதாக கூறிவந்தனர். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா 500 கடைகளை மூட உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவரது மறைவிற்கு பின்னர் முதல்வராக பெறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
அதிமுக ஆட்சியில் மொத்தம் 3,866 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 வருட இடைவெளிக்கு பின் ஆட்சியில் அமர்ந்த திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு என்ற மருந்துக்கு கூட பயன்படுத்தாமல் வெறும் வாய் அறிக்கை மூலமாகவே அறிவித்து வந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடைகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகமாக உயர்த்தி வந்தது, கடந்த 2022 மற்றும் 2023 ம் நிதி ஆண்டில் தமிழக அரசின் வருவாயில் 44,098.56 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இது தொடர்பாக அடுத்த நிதி ஆண்டில் 50,000 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேலையில் அந்த துறையின் (டாஸ்மாக்) அமைச்சரான செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் மது பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தகுதியான 500 கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூடப்படும் என்ற அறிவிப்பு தமிழகம் முழுவதும் மது பிரியர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது தேர்தல் சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதல்வர் ஸ்டாலினும், அவரது தங்கையான கனிமொழியும் கூறியது எந்த ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது, சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா என மக்கள் புலம்பி வருகின்றனர். சரியான வருமானம் இல்லாத கடைகளாக பார்த்து அவைகளை மட்டும் மூட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.