கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!

0
191

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!

சமீப காலமாக உணவகங்களில் உணவு உண்பதற்கே மிகவும் பயப்பட வேண்டி உள்ளது. ஏனென்றால் உணவு சமைக்கும்போது அதில் என்ன விழுகிறது என்று கூட கவனிக்காமல் அசால்டாக மக்களுக்கு அதனை விற்று விடுகின்றனர். அவ்வாறு மக்கள் வாங்கும் உணவில் எலி, பல்லி பாண்டேஜ் போன்றவைகள் உள்ளது. நேற்று தனியார் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பீட்ரூட் பொரியலில் முழுமையான எலி தலை இருந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதே போல சில மாதங்களுக்கு முன்பு முழுதாக பொரித்த கோழியில் பாண்டேஜ் இருந்ததும் அதிர்ச்சி அளித்தது. இதனை தெரியாமல் உண்டு விட்டாலோ அல்லது அதிலிருந்து ஏதேனும் நமது உடலுக்குள் சென்றாலும் கூட நம் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். இவ்வளவு கவனக்குறைவால் தற்பொழுது உணவகங்கள் இயங்கி வருகிறது.

இதுபோல் தினம் ஒரு சம்பவமாக, இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கேஎஃப்சி யில் மற்றொரு அதிர்ச்சிகாரமான செயல் அரங்கேறியுள்ளது. அங்கு வந்தவர் பர்கர் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு பர்கர் உடன் சேர்ந்து, இலவச பரிசாக ஒரு கையுறையும் வந்துள்ளது. அவருக்கு வந்த பர்கரில் சிக்கனுடன் கையுறையும் சேர்த்து சமைத்துள்ளனர். இதனை கண்ட வாடிக்கையாளர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை நான் பார்க்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்? குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது போல் என்னிடம் கேட்கிறீர்கள்? இவ்வாறு அக்கடையில் உள்ளவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Previous articleபட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!
Next article11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!