ஸ்ரீநகர்:
சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
காஷ்மீர் சமவெளியில் அமைந்த பதினோறு மாவட்டங்களில் சோபியான் மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமையிடம் ‘சோபியான்’ நகராகும்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அக்லர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது, அங்குவந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியவுடன் அங்கிருந்து பயங்ரவாதிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.மேலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
அதனையடுத்து அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்களை முதலியவற்றை பறிமுதல் செய்தனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.