உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

Photo of author

By Divya

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

Divya

கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது.

இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும்.

உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்:

**தண்ணீர் பருகாமை
**அதிகப்படியான வெயில்
**கோடை கால நோய் தொற்று
**உடல் உஷ்ணம்

தேவையான பொருட்கள்:-

1)சொடக்கு தக்காளி இலை
2)சொடக்கு தக்காளி பழம்
3)மஞ்சள் தூள்

பயன்படுத்தும் முறை:-

சொடக்கு தக்காளி இலை மற்றும் சொடக்கு தக்காளி பழம் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள்.இவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் சிறிதளவு தெளித்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சொடக்குதக்காளி பேஸ்ட்டில் கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இந்த பேஸ்டை உடல் சூட்டால் வரும் கட்டிகள் மீது பூசினால் சீக்கிரமாக மறையும்.

உடல் கட்டிகளை வத்த வைக்கும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் தூள்

பயன்படுத்தும் முறை:-

கிருமி நாசினி பொருளான வேப்பிலை உடல் கட்டிகளை மறைய வைக்கும் மூலிகை மருந்தாக பயன்படுகிறது.வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வேப்பிலை பேஸ்ட்டில் மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து உடல் கட்டிகள் மீது பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

உடல் சூட்டு கட்டிகளை மறைய வைக்க மேலும் சில தீர்வுகள்:

**கல் உப்பை சூடாக்கி காட்டன் துணியில் கட்டி உடல் சூட்டால் உருவான கட்டிகள் மீது வைத்து அழுத்தம் கொடுத்து வந்தால் அவை சீக்கிரம் வத்திவிடும்.

**மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு சூடாக்கி உடல் சூடால் உருவான கட்டிகள் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

**அதிகளவு தண்ணீர் பருகினால் உடல் சூடாவது தடுக்கப்படும்.இதனால் வேனல் கட்டிகள் உருவாவது கட்டுப்படும்.