கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்!
இயற்கையாக கிடைக்கக்கூடிய அத்திப்பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம்.
அத்திப்பழம் என்பது நாட்டு அத்தி மற்றும் சீமை அத்தி என்று இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது.
இதனை நாம் அதிக இடத்தில் பார்க்க முடிவதில்லை ஆனால் கடைகளில் கிடைக்கிறது. இதனை தினசரி நாம் உண்பதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.அதனைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
அனிமியா என்கின்ற ரத்தச் சோகையை குணப்படுத்துகிறது. இதை உண்பதற்கு காரணம் நம் உடலில் போதுமான அளவு இரும்புச் சத்து இல்லாத காரணத்தினால் ரத்தசோகை ஏற்படுகிறது எனவே அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் அத்திப்பழத்தில் 0.8 கிராம் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நாம் தினசரி உட்கொள்வதன் காரணமாக இரும்பு சத்துக்களின் அளவு அதிகரித்து ரத்தச் சோகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராதாலும் பாதுகாக்கிறது.
உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு கால்சியம் சத்துக்கள் மிகவும் தேவை அவை அதிகம் நிறைந்த ஒரு பழம் அத்திப்பழம் ஆகும். இதனை நம் இரவு உறங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை உட்கொள்வதன் காரணமாக கால்சியம் சத்து அதிகரிகின்றது..
100 கிராம் அத்திப்பாலத்தில் 35 கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. நம் உடலின் எலும்புகளை வலுப்படுத்துகிறது இதன் விளைவாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கை, கால் வலி, மூட்டு வலி,முதுகு வலி போன்ற அனைத்தும் முற்றிலும் குணமடைய உதவுகிறது.