சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்வது அதிக அளவு வடியை கொடுப்பதோடு முதல் காலத்தில் மிகப்பெரிய தொகையாக மாறவும் செய்கிறது.
மாதாந்திர சேமிப்பு திட்டம் :-
தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய முக்கிய திட்டங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டமும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தனிநபர் கணக்கு தொடங்கும் பொழுது 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும் கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மாதாந்திர சேமிப்பு கணக்குகளில் ஆயிரம் ரூபாய் செலுத்துவதன் மூலம் நம்மால் பயன்பட முடியும். நாம் சேமிக்க கூடிய பணத்திற்கு 7.4% வட்டியானது வழங்குகிறது.
ஒவ்வொரு சேமிப்பிற்கும் ஏற்றவாறு அதற்கான முதல்வொகை கிடைக்கிறது. உதாரணத்திற்கு 9 லட்சம் முதலீடு 5 வருடங்களுக்கு செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதனுடைய முதிர்வு தொகை 3,33,000 லட்சம் ரூபாய் வட்டி மட்டுமே கிடைக்கும். இதற்கான ஒரு மாத வட்டி என்பது 5,550 ரூபாய் ஆகும்.சில நேரங்களில் இது போன்ற சேமிப்பு கணக்குகளை தொடர முடியாமல் பாதியில் பணம் எடுக்கக்கூடிய சூழல் உருவாகிறது என்றால் அவற்றிற்கும் சில விதிமுறைகளை தபால் அலுவலகம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி , 1 வருடத்திற்குள் கணக்கை மூடினால் சேமிப்பு தொகையானது திரும்ப தர முடியாது என மறுக்கப்பட்டுள்ளது. அதுவே பாதி காலமான 3 வருடங்களுக்குள் கணக்கை மூடினால் உங்களுடைய அசல் மற்றும் வட்டியில் இருந்து 2% அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும். திட்டங்களை முழுமையாக படித்த பின்பு தான் அந்த திட்டங்கள் சேமிப்பை துவங்குவது அவசியம்.