மென்சஸ் உடனடியாக வர வேண்டுமா?? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!
பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் சுழற்சி தான். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை. ஒரு சில பெண்கள் மாதவிடாய் உடனடியாக வருவதற்கு மாத்திரைகளை உட்கொள்கின்றனர், அது அந்த அளவிற்கு நல்லதல்ல எனவே முடிந்தவரை இயற்கையான முறையில் மாதவிடாய் வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.
மாதவிடாய் வலி ஏன் ஏற்படுகிறது:
மாதவிடாய் நேரத்தில் பெண்களின் கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 – 5 நாள்கள் வரை நிகழும். கருப்பைச் சுருங்கி விரிவதில் இரண்டு விதம் இருக்கின்றன.
ஒன்று, மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விரியும். அல்லது சுருங்கி விரிகிற வேலையைச் சரியாகச் செய்யாது. இதுதான் பீரியட்ஸ் வலிக்கான காரணம். இப்படியல்லாது கருப்பை சரியாகச் சுருங்கி விரிய ஆரம்பித்தால், சீரான ரத்தப்போக்கு நிகழ ஆரம்பித்துவிடும். சீரான ரத்தப்போக்கு வந்தவுடனே பீரியட்ஸ் வலியும் படிப்படியாகக் குறைந்துவிடும்.
யாருக்கெல்லாம் மாதவிடாய் வலி வரும்?
வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.
இவ்வாறு இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்
தண்ணீர்
ஓமம்
எலுமிச்சை பழம்
செய்முறை:
1: முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2: பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நறுக்கிய வெங்காயம் அரை டேபிள் ஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
3: பின்பு அதனை வடிகட்டி அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் போதும்.
ரொம்ப நாள் மென்சஸ் ஆகாமல் இருந்தால் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும் மற்றும் இரவில் தூங்குவதற்கு முன்பும் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை குடித்தால் போதும்.
இதனை குடித்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது ஏனென்றால் இதில் பயன்படுத்தக்கூடிய பொருளும் அனைத்தும் இயற்கையானது. இர்ரெகுலர் பீரியட்ஸ் இருப்பவர்களுக்கு இதனை குடித்தால் மாதம் மாதம் சரியாக பீரியட்ஸ் வரும்.
இதில் பயன்படுத்தி இருக்கும் வெங்காயத்தில் விட்டமின் C, விட்டமின் B6 ,ஃபோலிக் ஆசிட், கால்சியம் இதுபோன்ற சத்துக்கள் இருக்கிறது. எனவே இதை குடித்த மென்சஸ் நார்மலாக இருக்கும்.
இதில் பயன்படுத்தி இருக்கும் ஓமம் கர்ப்பப்பையில் ஒரு சின்ன உஷ்ணத்தை இயற்கையாக தூண்டிவிடும் அதனால் அதில் உள்ள அழுக்கு தானாக வெளியே வரும்.
எலுமிச்சை சாறு விட்டமின் C உள்ளது கர்ப்பப்பையில் நச்சுத்தன்மைகளை வெளியேற்றுவதற்கு இது உதவுகிறது.