மாணவர்களே அரசின் உதவித்தொகை கிடைக்க வேண்டுமா? அப்பொழுது ரூ.100 மட்டும் செலுத்தி இதனை தொடங்குங்கள்!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் சேமிப்புக் கணக்கு வங்கியின் முழு விவரங்களும் பள்ளியில் சேரும் பொழுதே தேவைப்படுகிறது. அதனால் அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கை தொடங்குவது அவசியமாகும். இந்நிலையில் மாணவர்களின் வங்கி கணக்கு இந்திய தபால் துறையின் கீழ் இயங்கிவரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகளில் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்று. ரூ100 மட்டும் செலுத்தி இந்த சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.
இதற்காக மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் போன்றவற்றை கொண்டு சென்று பிறகு கணக்குகளை தொடங்க வேண்டும். சேமிப்பு கணக்கின் எண் மற்றும் பெயர் வங்கியின் முழு விவரங்கள் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் போன்றவற்றை பள்ளி மற்றும் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கி கணக்கானது உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.