நாம் உட்கொள்ளக் கூடிய உணவு எளிதில் செரிக்க கூடியதாக இருந்தால் மட்டுமே குடலால் அவை உறிஞ்சப்படும்.சாப்பிடும் உணவை குடல் உறிஞ்சவில்லை என்றால் நிச்சயம் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் Digestion என்று அழைப்பார்கள்.
தற்போதைய உணவுப் பழக்கவழக்கம் மோசமானதாக இருக்கிறது.எண்ணையில் வறுத்த உணவுகள்,கடிமான உணவுகள்,மைதா உணவுகளை தான் அனைவரும் அதிகமாக உட்கொள்கிறார்கள்.நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகளவு எடுத்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம்.
சிலருக்கு உணவு சாப்பிட்ட பீலே இருக்காது.இதற்கு காரணம் குடல் உறிஞ்சப்படுதலில் பிரச்சனை தான்.சிலருக்கு உட்கொண்ட பிறகு வயிற்றுக்குள் கல் வைத்தது போன்ற உணர்வு இருக்கும்.இது செரிமானப் பிரச்சனைக்கான அறிகுறியாகும்.குடல் ஆரோக்கியம் என்பது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையை பொறுத்து தான் உள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுகளால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு வீக்கம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் உணடாகிறது.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உணவை பிரித்து உண்ணலாம்.அதாவது மூன்று வேளை உணவை ஆறு வேளையாக சிறிது சிறிதாக உட்கொள்ளலாம்.அதேபோல் மாமிச உணவுகளை நன்றாக வேகவைத்து உட்கொள்ளலாம்.
உணவு உட்கொண்ட பிறகு ரசம் பருகலாம்.ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு,சீரகம்,பூண்டு போன்றவை உணவை எளிதில் செரிக்க உதவுகிறது.பைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இது எளிதில் செரிமானமாவதை தூண்டுகிறது.