நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகும். வரட்டு இருமலை குணப்படுத்த பல வகையான இயற்கை வைத்திய முறைகள் இருக்கின்றன அதில் ஒன்று மஞ்சள்.
வரட்டு இருமலை குணப்படுத்தும் செய்முறைகள்ஒ
ரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை கொதிக்க வைக்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை இரு நேரமும் இதனை மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இவ்வாறு இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடிக்கும் பொழுது நுரையீரலில் படித்திருக்கும் சளியை நீங்க உதவுகிறது.
மேலும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அதிமதுரம் பொடி, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் சம அளவில் வெந்நீரில் கலந்து இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு இதனை இரண்டு நாட்கள் குடித்து வந்தால் நுரையீரலில் படிந்துள்ள சளி குணமாகிவிடும். அதனுடன் வறட்டு இருமலும் குணமடைந்து விடும்.