இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!
இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதளவில் உண்ணப்படும் அனைத்து உணவுப் பொருட்களோ அல்லது காய்கறிகளும் இவை அனைத்தையும் நாம் பெரிதும் குளிர்சாதன பெட்டிகள் தான் வைத்து பயன்படுத்துகின்றோம்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே குளிர்சாதனப் பெட்டிகள் தான் வைக்கின்றோம். அதாவது சொல்லப்போனால் நமக்கு நேரமின்மையின் காரணமாக தினமும் சென்று காய்கறிகளை வாங்குவதில்லை. ஒருமுறை வாங்கிய காய்கறிகளையே நாம் குளிர்சாதனைப் பெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்துகின்றோம்.
இவ்வாறு பயன்படுத்துவதால் அதன் சத்துக்கள் குறைந்து விடுமோ என்று நம்மில் பலருக்கு இந்த கேள்வி உள்ளது.
அதனை நாம் இப்பொழுது அறிவியல் ரீதியாக பார்க்கலாம்.
அதிலும் எந்தெந்த உணவுப் பொருட்களை எவ்வளவு நாட்கள் வைக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
நாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களில் வைட்டமின் சி உணவுப்பொருட்கள் அதாவது கேரட் ஆரஞ்சு பழம் போன்ற வைட்டமின் சி கொண்ட பொருட்கள் ஒரு வாரத்திற்கு மேல் குளிர்சாதன பெட்டியில் இருந்தால் கட்டாயமாக 50% சத்தை இழக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.
இதன் நன்மை என்னவென்றால் நாம் வாங்கிய காய்கறிகளை மூன்று நாட்கள் மட்டுமே குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
அடுத்து கீரைகள் இவற்றை நீங்கள் ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பழங்கள் இவற்றை நீங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும். அதிலும் ஆப்பிள் போன்ற பழங்களை நீங்கள் இரண்டு, மூன்று வாரங்கள் கூட குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணலாம்.
இவற்றையெல்லாம் தாண்டி பால் பொருட்களை நீங்கள் மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
அடுத்தபடியாக இறைச்சி நீங்கள் இதனை பிரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம் அதிலும் டீப் ஃப்ரீசரில் வைத்தால் மூன்று மாதங்கள் வரை கூட பயன்படுத்தலாம்.
சமைத்த உணவு பொருட்களை வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.