மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

0
150
#image_title

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

தமிழ்நாட்டில் மிக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வெளிநாடு வெளி மாநிலம் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்களின் நகை பணம் போன்றவை திருடப்படுவது ஒரு வழக்கமாக தான் உள்ளது. இதனையெல்லாம் கண்டறிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர்.

வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு முன் அங்கு இருக்கும் விடுதியில் தங்குவர். அவ்வாறு தங்குபவர்களின் விவரங்களை விடுதி நிர்வாகம் பெறுவது வழக்கம்.

அதாவது ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் விவரங்களை பெற்றுக் கொள்வர். இவ்வாறு பெறுவதால் வருபவர்கள் மூலம் ஏதேனும் குற்றம் நடந்தால் போலீசாருக்கு கண்டறிய அது உதவியாக இருக்கும்.

ஆனால் விடுதி நிர்வாகம் இவ்வாறு ஆதார் அட்டை நகலை வாங்கி வைப்பதால் எந்த ஒரு பயனும் இருப்பதில்லை. இது காவல்துறைக்கு சற்று சிரமத்தை தான் ஏற்படுத்துகிறது.

எனவே மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். விடுதியில் தங்கும் மக்களிடமிருந்து பெறப்படும் ஆதார் அட்டை குறித்த விவரங்கள் அனைத்தையும் விடுதி நிர்வாகமானது மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் தரவுகள் அனைத்தும் அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்றுவிடும். இந்த தரவுகள் மென்பொருளில் பதிவாகுவதால் காவல்துறைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்த கமிஷனர் கூறுகையில், மென்பொருள் மூலம் தரவுகள் பதிவு செய்யப்படுவதால் குற்றம் புரிந்தவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள எங்களுக்கு இது ஏதுவாக இருக்கும் என கூறினார்.