முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

0
132

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பங்கேற்கவர் இந்த நிகழ்ச்சி தாமதமானது அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பார்க்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டசபை உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் பார்த்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் அரண்மனையின் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 17.50 கோடி மதிப்பீட்டில் காமராஜர் காய்கறி மார்க்கெட் சீரமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதில் சிறிய மற்றும் பெரிய கடைகள் என்று 304 கடைகளும், 170 இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும், 30 4 சக்கர வாகனங்கள் நிறுத்தவும், 20 கனரக லாரிகள் நிறுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை காணொளி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் காமராஜர் மார்க்கெட்டை திறப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது இதற்காக காலை சட்டசபை உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றுக் கொண்டனர்.

அங்கே பெரிய எல் இ டி திரையில் முதலமைச்சர் காணொளியில் மார்க்கெட்டை திறந்து வைப்பதை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் முதலமைச்சர் மார்க்கெட்டை திறந்து வைப்பதற்கு தாமதம் ஆகும் என்று தலைமை கழகத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொது இடத்தில் பல்வேறு அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் அங்கு செல்ல வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகின்ற நிலையில், அரசு திட்டம் சார்ந்த காணொளியை ஒளிபரப்பாமல் தற்போது வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர் என்று சொல்லப்படுகிறது.

திரையரங்குகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தை எந்த உரிமையும் பெறாமல் திறந்தவெளியில் பலர் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசின் திட்டங்களை ஒளிபரப்பாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

Previous articleதேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
Next articleஇவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!