தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

0
305

பாஜகவை சார்ந்த சில பிரபலங்கள் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகள் விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நேர்காணல் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக கட்சியின் சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் பாஜகவை சார்ந்த சிலர் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை தவிர்த்து தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நேர்காணல்கள் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அண்ணாமலை கட்சியினருக்கு எப்படி சில கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பதும் கட்சியின் நலனுக்காக தான் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஒரு கட்சி என்று எடுத்துக் கொண்டால் அந்தக் கட்சியின் கட்டுப்பாடு தலைமையிடம் தான் இருக்க வேண்டும். ஒரு கட்சியில் இருந்து கொண்டு யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டால் அது பிற்காலத்தில் கட்சிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே அண்ணாமலை இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleசென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!
Next articleமுதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here