சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!
நாம் தற்பொழுதைய காலத்தில் எதாவது நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டால் உடனே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் நம் உடலில் ஏற்படும் நோய்கள் தற்காலிகமாக குணப்படுத்தும். ஆனால் மீண்டும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அந்த மருந்துகளே ஏற்படுத்திவிடும்.
ஆனால் நாம் யாரும் நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது கிடையாது. நாட்டு மருந்துகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது. இந்த பதிவில் சித்த மருத்துவம் என்று அழைக்கும் மருத்துவ முறையில் இருக்கும் மருந்து பொடி வகைகளையும், அது குணப்படுத்தும் நோய்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சித்த மருந்து பொடியும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!
* அஷ்ட சூரணம் பொடி
வாயுக் கோளாறு உள்ளவர்கள் அஷ்ட சூரணம் பொடியை எடுத்துக் கொள்வதால் வாயுக் கோளாறு பிரச்சனையை குணப்படுத்தலாம்.
* சுண்டவற்றல் பொடி
வயிற்றில் புழுக்கள் இருந்தால் அதை அழித்து வெளியேற்ற சுண்டவற்றல் பிடியை பயன்படுத்தலாம்.
* மிளகு கற்பப் பொடி
இந்த மிளகு கற்பப் பொடியை மூல நோய்கள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். இதனால் மூல நோய் பிரச்சனை குறையும்.
* வெந்தயக் கூட்டுப் பொடி
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயக் கூட்டுப் பொடியை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
* சிற்றரத்தைப் பொடி
நம்மில் சிலருக்கு நெஞ்சு சளி பிரச்சனை இருக்கும். அந்த நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற நாம் சிற்றரத்தை பொடியை பயன்படுத்தலாம்.
* சுக்கு கஷாயப் பொடி
சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் சுக்கு கஷாயப் பொடியை பயன்படுத்தலாம். இதன் மூலமாக சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமடையும்.
* தாது கல்ப பொடி
மலட்டுத் தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள் தாது கல்ப பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் மலட்டுத் தன்மை பிரச்சனை சரியாகும்.
* கடுக்காய் பொடி
வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் புழு, பூச்சி, கிருமிகள் எதுவும் இல்லாமல் வயிறு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கடுக்காய் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த ஒவ்வொரு பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப எடுத்து நாம் பயன்படுத்தலாம்.