ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!

0
197

ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றது இந்த வகையில் தினமும் காலை டிபன் மதியம் சாப்பாடு இரவு டிபன் என சுழற்சி முறையில் உணவுகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இரவு நேரத்தில் ஃபுல்கா சப்பாத்தி சாப்பிடுவது மிக நல்லது. புல்கா சப்பாத்தி செய்வதற்குதேவையானவை: கோதுமை மாவு – 2 டம்ளர், தண்ணீர் – 1 டம்ளர், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வையுங்கள். இனி, சப்பாத்தி தயாரித்து, தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் சப்பாத்தியை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.மேலும் அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில் இரண்டு பக்கமும் காட்டி எடுத்துவிட்டால். ஃபுல்கா சப்பாத்தி ரெடி  ஃபுல்காவுக்கு  சைட் டிஷ் சப்ஜி தேவையானவை பொருள்: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள் – கால் கிலோ. பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் – 2 டம்ளர், உப்பு – தேவையான அளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு.

செய்முறை : குக்கரை வைத்து சூடானதும், காய்கறிகளைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ‘சிம்’மில் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு விசில் விட்டு இறக்க வேண்டும்.மேலும் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காய்கறியில் இதைச் சேர்க்க வேண்டும்.

 

Previous articleசனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next article10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..