கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையும் படுத்தப்பட்டது. இதனை இரண்டு தவணையாக மக்களுக்கு செலுத்தி வந்தனர். குறிப்பாக இந்தியாவில் கோவிட் ஷீல்ட் தடுப்பூசியானது அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தினர். இந்த தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்தது.
ஆனால் அது அனைத்தும் வதந்தி தான் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். மேற்கொண்டு அனைத்து நாடுகளிலும் இந்த கோவிட் ஷீல்ட் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டனர். அவ்வாறு செலுத்தியதில் ஒருவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இவரைத் தொடர்ந்து 51 வழக்குகள் இவ்வாறு குவிந்தது.
இவ்வாறான வழக்குகள் குறித்து அத்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அந்த வழக்கிற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த கோவிட் ஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவது என்பது உண்மைதான். ஆனால் அது நூற்றில் ஒருவருக்கு தான் ஏற்படும். குறிப்பாக ரத்தம் உறைதல் ரத்த நாளங்களில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையானது குறைவது போன்றவை உண்டாகும்.
இது அனைவருக்கும் கட்டாயம் ஏற்படாது என்றும் ஏதோ ஒரு மருத்துவ சூழ்நிலையில் இவ்வாறு உண்டாகும் இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை என கூறியுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.