இளம் தலைமுறையினர் பலர் நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடல் நரம்புகள் பலவீனமானால் இந்த பாதிப்பு ஏற்படும்.மது அருந்துபவர்களுக்கு இந்த நரம்பு தரள்ச்சி உண்டாக 99% வாய்ப்புள்ளது.
நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:
*தசைப் பிடிப்பு
*மரத்து போதல்
*அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு
*தலைவலி
நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள்:
*உடல் நடுக்கம்
*அதிகப்படியான சோர்வு
*நிலைத்தடுமாற்றம்
நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் குறிப்புகள்:
வீட்டு வைத்தியம் ஒன்று:
1)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)பேரிச்சம் பழம் – ஐந்து
நாட்டு மருந்து கடையில் அமுக்கிரா கிழங்கு பொடி கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி அளவு அமுக்கிரா கிழங்கு பொடியை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.
பிறகு ஐந்து பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு அதில் போட்டு பிரட்டி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
வீட்டு வைத்தியம் இரண்டு:
1)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி கொதிக்கவிடவும்.
பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
வீட்டு வைத்தியம் மூன்று:
1)பேரிச்சம் பழம் – இரண்டு)(விதை நீக்கப்பட்டது)
2)பால் – 150 மில்லி
இரண்டு பேரிச்சம் பழத்தை மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 150 மில்லி பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பால் சுண்டி வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் நரம்பு தளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வீட்டு வைத்தியம் நான்கு:
1)முருங்கை கீரை – கால் கப்
2)முருங்கை பூ – இரண்டு தேக்கரண்டி
முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பிறகு அதில் கால் கப் முருங்கை இலை மற்றும் இரண்டு தேக்கரண்டி முருங்கை பூ போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.பிரண்டை சூப்,மாதுளை ஜூஸ் போன்றவை நரம்பு தளர்ச்சிக்கு சிறந்த தீர்வாகும்.