மன அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்! எச்சரிக்கை உடனே விடுபட தீர்வு!
மன அழுத்தத்தை அறிகுறிகள் கொண்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என நாம் எண்ணுவதுண்டு.
ஒருவர் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. ஆனால் யார் ஒருவர் மாதக்கணக்கில் சோகமாக உணர்கிறார்கள் என்றால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஒருவருக்கு உடலில் எவ்வித பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் மனதில் தான் நிறைய கோளாறுகள் இருக்கும். பலர் நமக்கு மன அழுத்தம் தான் என்று அறியாமலே இருக்கிறார்கள். இதனை அப்படியே விட்டுவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
பொதுவாக மன அழுத்தம் உள்ளவர்கள் எதிர்மறையான சிந்தனைகளை எதிர்கொள்வார்கள். அது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் என்றாலும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கக்கூடும்.
மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிகுறியாக தூக்கமின்மை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பகலில் எந்த வேலையும் செய்ய பிடிக்காது. மேலும் இரவில் தூக்கம் என்பதே வராது.
சிலர் டிவி பார்த்தபடியே படுத்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கவனம் டிவியில் இருக்காது. விடிந்த உடனே எதைப்பற்றி யோசித்தோம். என்பது கூட அவர்களுக்கு தெரியாது.
மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் வலி ஏற்படுவது போல் தோன்றும்.அவர்களின் உடல் எடை திடீரென கூடுவது போலவும் உடலில் உள்ள எலும்புகளில் வலி வருவது போலவும் தோன்றும்.
மன அழுத்தம் உள்ளவர்கள் மனதில் நிம்மதி இல்லை என்றாலோ அல்லது நம் உணர்வுகளை பகிர்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலோ அவர்களுக்கு அதிக அளவு உணவுகளை சாப்பிட தோன்றும். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதுதானா என்று யோசிக்க மாட்டார்கள். இவ்வாறு மன அழுத்தத்தில் இருந்து விடுபட நாம் காலை நேரத்தில் உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.