சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

0
92

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து அவருக்காக ஒரு கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் இமாலய வெற்றிதான்.

அதன் பின்னர் விஜய்யோடு கூட்டணி அமைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களின் மூலம் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரானார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. விமர்சன ரீதியாகவும் கழுவி ஊற்றப்பட்டது. இதனால் அடுத்து அவர் இயக்க இருந்த விஜய் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. ஒரு அனிமேஷன் திரைப்படத்துக்கான வேலைகளில் இருப்பதாக சொல்லபடுகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்புவை சந்தித்து அவருக்கு ஒரு கதையை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.