மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

0
69

மீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் படங்களை இயக்கி10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரின் மகன் நடிகர் சிம்பு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நியுயார்க் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி இந்தியா திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடைசியாக டி ராஜேந்தர் வீராசாமி படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவை திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தியவர் டி ஆர். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு இப்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.