சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

Photo of author

By CineDesk

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

நடிகர் சிம்புவுடன் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கால்சீட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும், அந்த பத்து நாட்களிலும் அவர் படப்பிடிப்பிற்கு வருவது அதைவிட பெரிய விஷயம் என்றும் கோலிவுட்டில் கூறப்படுவது உண்டு

இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவிடம் தொடர்ச்சியாக 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளாராம். வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக ’மாநாடு’ படத்திற்காக சிம்பு கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், இந்த 80 நாட்களில் இந்த படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பு மொத்தத்தையும் முடித்துக் கொடுத்து விடுவதாக என்று சிம்பு வாக்குறுதி கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இந்த படத்தில் முதன்முதலாக சரியாக படப்பிடிப்புக்கு வருவேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாகவும், எனவே இந்த படம் இனிமேல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும் என்றும் படக்குழுவினர் கூறிவருகின்றனர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் இரண்டு பேர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது