கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா! சிம்பு!

0
564

நயன்தாரா மற்றும் சிம்புவுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று விட்டது என்று கெட்டவன் படத்தை இயக்கிய இயக்குனர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா சிம்பு அவர்களின் காதல் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விட்டனர் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் உண்மை என்னவென்று கெட்டவன் படத்தை இயக்கிய ஜிடி நந்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாரா சிம்புவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த முடிந்தது என்ற பரபரப்பு செய்தியை தெரிவித்துள்ளார். அதை நேரில் பார்த்த சாட்சி நான் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

அதைப் பற்றி அவர் கூறியதாவது ” கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின் பல காரணங்களால் பிரிந்து விட்டனர் என வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டாலும், உண்மையான விஷயம் என்னவெனில் திருவல்லிக்கேணியில் இருக்கும் பிள்ளையார் கோயில் அருகே உள்ள ஒரு ஜோசியரிடம் நானும் சிம்புவும் மற்றும் இன்னொரு நண்பரும் சேர்ந்து ஜாதகம் பார்த்தோம். இருவருக்கும் இடையே பிரச்சனைகள் சண்டைகள் வந்து கொண்டே இருக்கும். இருவருக்கும் தனி வாழ்க்கை இருக்கு ஒன்றாக வாழ கூடாது. என அந்த ஜோசியர் கூறினார். மேலும் நயன்தாரா கல்யாணம் செய்தால் நடுத்தெருவில் தான் நிற்பார். யாரை கல்யாணம் செய்தாலும் அவர் நடுத்தெருவில் நிற்பார். கல்யாணம் ஆகாமல் இருந்தால் முதலமைச்சர் ஆக கூட வாய்ப்பிருக்கிறது. என அந்த ஜோசியர் கூறியதாக இயக்குனர் நந்து கூறினார்.

நயன்தாரா ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உடையவர் என்பதால் சிம்புவை விட்டு விலகி விட்டதாகவும், சிம்புவும் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விடக் கூடாது என்பதற்காக விலகியதாகவும் கூறியுள்ளார்.

இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் தங்களது வாழ்க்கையை தேர்ந்தெடுத்து தனித்தனியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா அதன்பிறகு கொடிகட்டி பறந்து வருகிறார். சிம்பு அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். சீக்கிரம் அவர் கம் பேக் கொடுப்பார் என்று நம்பி உள்ளார்கள்.

 

 

Previous articleFZS பைக்கை அசால்டாக ஓட்டும் ஆலியா மானசா!
Next article12 ஆம் வகுப்பு மாணவனுடன் கொஞ்சி உறவு! ஊரார் தந்த தண்டனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here