நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

Photo of author

By Parthipan K

சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன .

நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் என்று தகவல் வைரலானது. இந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சிம்பு கேரளாவுக்கு சென்று உள்ளார் என்ற அப்டேட்கள் கிடைத்துள்ளன.

நடிகர் சிம்பு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் அதிக உடல் எடையுடன் காணப்பட்ட நிலையில் பலரும் அவரை ட்ரோல் செய்து வந்தனர். இந்த லாக்  டவுன் காலத்தில் அவர் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து கச்சிதமான மாறிவிட்டார். அதற்காக கடுமையான உடற்பயிற்சி எல்லா சென்றாராம்.அந்தப் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி னார்.

சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. சிம்புவும் அந்த படத்திற்காக முழுமூச்சுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.