சிம்புவின் வெந்து தணிந்தது காடு… கடைசி நேரத்தில் மீண்டும் ஷூட்டிங்கா?
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு தாமதம் ஆகி வந்த நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சியிலேயே படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தின் லக்னோவில் கடைசிகட்டமாக நான்கு நாட்கள் மட்டும் விடுபட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றார்களாம். ஆனால் இந்த ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் காட்சிகள் ஏற்கனவே முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன. இந்த படப்பிடிப்பை முடித்து கௌதம் மேனன் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.