Breaking News

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது.

சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 மாநாடு வெற்றியால் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் வியாபாரமும் அதிகளவில் செய்யப்பட்டது. ஆனால் ரிலீஸூக்கு பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களைக் கவரவில்லை. அதே நேரத்தில் மோசமான விமர்சனங்களும் இல்லை என்பதால் மோசமான வசூலும் இல்லை.

ஆனால் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்ததுதான் ரசிகர்களுக்குக் கொஞ்சம் கலக்கத்தை உருவாக்கியது. ஆனாலும் அந்த பாகம் உடனடியாக உருவாவது போல தெரியவில்லை. இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து நாளை அக்டோபர் 13 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிம்பு இந்த படத்துக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படம் என்ன என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட பத்து தல ஷூட்டிங்கில் இப்போது நடித்து வருகிறார்.

Leave a Comment