தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து!

0
87

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து!

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார். அவருக்கு பதில் சிராஜ் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் பூம்ராவுக்கு மாற்று வீரராக யார் இறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இரண்டு வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷமி ஏற்கனவே உலகக்கோப்பை அணியில் ஸ்டாண்ட்பை வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஷமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்னும் தன் உடல் தகுதியை நிரூபிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் அதிக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் சிராஜ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இதனால் ஷமியை விட அவ்ரே உலகக்கோப்பைக்கு தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்வீட் செய்துள்ளார்.