பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.இந்த மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு,மிகவும் குறைவான இரத்தப்போக்கு,வயிறு வலி போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
இந்த மாதவிடாய் உதிரப்போக்கு ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.சிலருக்கு ஒரு நேரம் அதிக இரத்தப்போக்கு வெளியேறும்,சில சமயம் குறைவாக இரத்தப்போக்கு வெளியேறும்.உங்களுக்கு மிகவும் குறைவான அளவு இரத்தப்போக்கு வெளியேறுகிறது என்றால் நீங்கள் மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதேபோல் அளவிற்கு அதிகமாக கட்டி கட்டியாக இரத்தப்போக்கு வெளியேறினாலோ தொடர்ந்து இரத்தப்போக்கு அதிகரித்தாலோ நீங்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது.உங்களுக்கு நிற்காமல் மாதவிடாய் உத்தரப்போக்கு அதிகமாக வந்து கொண்டே இருந்தால் வலி,சோர்வு,மயக்கம் போன்றவை ஏற்படும்.
TIPS 01
1)கருப்பைக்கட்டி
2)தைராய்டு தொந்தரவு
3)மன அழுத்தம்
4)ஹார்மோன் செயல்பாடில் மாற்றம்
5)உடல் நலக் கோளாறு
6)கருச்சிதைவு
TIPS 02
*பூண்டு
*தண்ணீர்
இரண்டு வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு மசித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் கட்டி கட்டியாக உதிரப்போக்கு ஏற்படுவது குறையும்.
TIPS 03
*இஞ்சி துண்டு
*தண்ணீர்
ஒரு சிறிய துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் அதிகப்படியான உதிரப்போக்கிற்கு தீர்வு கிடைக்கும்.அதேபோல் பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வந்தாலும் உதிரப்போக்கிற்கு தீர்வு கிடைக்கும்.