தேமல் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்!!

0
81
Simple Natural Remedies for Skin Diseases like Rash Scabies!!
Simple Natural Remedies for Skin Diseases like Rash Scabies!!

நாள்பட்ட தோல் வியாதிகளான தேமல் சொறி சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

1)தேமல்

குப்பைமேனி இலை
மஞ்சள்

ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து தேமல் மீது பூசி குளித்தால் சில வாரங்களில் அவை மறைந்துவிடும்.

கீழாநெல்லி
உப்பு

சிறிதளவு கீழாநெல்லி இலையை நீரில் அலசி விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து 1/4 தேக்கரண்டி கல் உப்பை தூள் செய்து கீழா நெல்லி விழுதில் கலந்து தேமல் மீது பூசி 1/2 மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2)சொறி சிரங்கு

வேப்பிலை
மஞ்சள் கிழங்கு

சொறி சிரங்கு பாதிப்பை குணமாக்க வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம்.முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு துண்டு மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த விழுதை சொறி சிரங்கு மீது அப்ளை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

அதேபோல் வேப்ப எண்ணையுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து சொறி சிரங்கு மீது அப்ளை செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கிராம்பு எண்ணெய்

சொறி சிரங்கு உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெய் அப்ளை செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல பலனை பார்க்க முடியும்.

போரிங் பவுடர்

சொறி சிரங்கு மீது போரிங் பவுடர் அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

சந்தனம்
கற்பூரம்

ஒரு தேக்கரண்டி சந்தனத் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்பூரத் தூளை மிக்ஸ் செய்து சொறி சிரங்கு மீது பூசினால் விரைவில் குணமாகும்.

Previous articleவயிற்றில் உள்ள மொத்த கழிவுகளையும் அகற்றும் 5 வகை தேநீர்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!!
Next article80 வயதிலும் உங்கள் முடி சும்மா கரு கருன்னு இருக்க.. இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள்!!